இலங்கையில் அதி தீவிர டெங்கு பாதித்த 71 மண்டலங்கள் அறிவிப்பு
2024-06-03 16:52:50

இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட 15 மாவட்டங்களில் உள்ள 71 மண்டலங்கள் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளான அதி தீவிர பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மே 26 முதல் ஜூன் 1 வரை  மேற்கொண்ட ர் ஆய்வில், கொசுக்களின் இனப்பெருக்க இடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை பதிவான டெங்கு நோயாளிகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், முந்தைய ஆண்டுகளின் அனுபவத்தின் படி தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மே முதல் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தகவலின் படி, இந்த ஆண்டு இதுவரை ஒன்பது இறப்புகளுடன் கிட்டத்தட்ட 25,000 பேர் வரை டெங்கு நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக பதிவாகியுள்ளன.