சீனாவின் நவீன நாகரிகத்தை உருவாக்குதல் பற்றிய கருத்தரங்கு தொடக்கம்
2024-06-03 09:38:55

சீன சமூக அறிவியல் கழகம், பெய்ஜிங்கில் மாநகரில் நவீன சீன நாகரிகத்தை உருவாக்குதல் பற்றிய கருத்தரங்கை 2ஆம் நாள் நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் அமைச்சருமான லீ சுலெய் இதில் உரைநிகழ்த்தினார்.

பண்பாட்டுத் தொடர்ச்சி மற்றும் வளர்ச்சி கலந்துரையாடல் கூட்டத்தில், புதிய யுகத்தில் பண்பாட்டுக் கடமையை நிறைவேற்றுவது மற்றும் சீன நவீன நாகரிகத்தை உருவாக்குவது குறித்து பொறுப்பேற்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் கோரினார். சீனப் பண்பாட்டின் கட்டுமானத்திற்கு இது திசையை வகுத்துள்ளது. கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்ற ஓராண்டு நிறைவில், ஷிச்சின்பிங் உரையின் எழுச்சியைக் கற்றுக்கொண்டு, ஷிச்சின்பிங் பண்பாட்டுச் சிந்தையை ஆழமாக புரிந்துகொண்டு, கல்வி ஆராய்ச்சி சாதனைகள் குறித்து பரிமாறிகொள்வது முக்கியம் என்றும் இதில் கலந்துகொண்டோர் கருத்துக்களைத் தெரிவித்தனர்.