எண்ணெய் உற்பத்தி அளவு தொடர்ந்து குறைவு
2024-06-03 19:38:09

பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு ஜுன் 2ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச எண்ணெய் சந்தையின் நிலைத் தன்மை மற்றும் சமச்சீர் நிலையைப் பேணிக்காக்கும் விதம், இவ்வாண்டின் 3வது காலாண்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 38 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய்கள் என்ற அளவிலான எண்ணெய் உற்பத்தியைத் தொடர்ந்து குறைக்கும் என்று இவ்வமைப்பு சார் மற்றும் சாரா 8 எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவு செய்துள்ளன.