ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் சிறிய குழுவை உருவாக்குவதற்கு சீனா எதிர்ப்பு
2024-06-03 19:24:31

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா மூத்தரப்பு சிங்கப்பூரில் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் கூட்டத்தை நடத்தி, கூட்டறிக்கையை வெளியிட்டது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் ஜுன் 3ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா இக்கூட்டத்தைப் பயன்படுத்தி, கூறப்படும் இந்தோ-பசிபிக் நெடுநோக்கு திட்டத்தை முன்னேற்றி, தைவான் பிரச்சினை பற்றி பொறுப்பற்ற கருத்துகளைப் பேசி, சீனாவின் உள் விவகாரத்தில் கடுமையாக தலையிட்டு, கடல் சார் பிரச்சினையில் சீனா மீது மீண்டும் பழி சுமத்தி, சீனாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையேயான உறவை வேண்டுமென்றே சீர்குலைத்து, சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டை கடுமையாக மீறியுள்ளன. சீனா இதைக் கடுமையாக எதிர்க்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் சிறிய குழுவை உருவாக்குவதை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது. ஒரே சீனா என்ற கோட்பாடு, சர்வதேச சமூகத்தின் பொது கருத்து மற்றும் சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடாகும். தைவான் பிரச்சினை, சீனாவின் உள் விவகாரமாகும். இதில் எந்த வெளிப்புற சக்தியும் தலையிடுவதை சீனா அனுமதிக்காது. தன் உரிமை பிரதேச இறையாண்மை மற்றும் கடல் சார் உரிமை நலனை சீனா உறுதியுடன் பேணிகாத்து, நேரடி தொடர்புடைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் தொடர்புடைய பிரச்சினையைத் தீர்ப்பதில் ஊன்றி நிற்கிறது என்றும் தெரிவித்தார்.