பயனுள்ள செயலால் உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காக்கும்: சீனா
2024-06-03 10:50:47

21ஆவது ஷாங்க்ரி-லா உரையாடல் ஜூன் 2ஆம் நாள் சிங்கப்பூரில் நிறைவடைந்தது. அதற்குப் பின்,  சீனப் பிரதிநிதிக் குழுவின் நிபுணர்கள் சீன மற்றும் வெளிநாட்டு செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர்.  

சீனா பயனுள்ள செயல்களின் மூலம் உலக அமைதியைப் பேணிக்காத்து வருகிறது என்றும், சர்வதேச சமூகத்துக்கு மேலதிக பொது பாதுகாப்புக்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்றி வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

உலகின் பொது பாதுகாப்புக்குச் சீனா தொடர்ந்து பங்காற்று. எதிர்காலத்திலும், ஆசிய-பசிபிக் பிரதேச நாடுகள் மற்றும் உலகின் தொடர்புடைய பல்வேறு தரப்புகளுடன் தொடர்ந்து ஒத்துழைத்து ஆசிய-பசிபிக் பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைக்கும் என்று சீன மக்கள் விடுதலைப் படைத் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணை பேராசிரியர் ட்சாங்ச்சி கூறினார்.