இலங்கையின் முதல் புதுப்பிக்கப்பட்ட எரிபொருள் நிலையம் திறப்பு
2024-06-04 17:35:48

இலங்கையின் நவகமுவ பகுதியில் உள்ள டிரான்ஸ் லங்கா எரிசக்தி நிறுவனத்தின் முதல் புதுப்பிக்கப்பட்ட எரிபொருள் நிலையத்தை சினோபெக் லங்கா எனர்ஜி (பிரைவேட்) லிமிட்டெட்  நிறுவனம் திறந்து வைத்தது. இது தெற்காசியாவில் எரிபொருள் சில்லறை முனைய விற்பனை சந்தையில் சினோபெக்கின் முதல் தோற்றத்தை குறிக்கிறது.

இலங்கையின் எரிசக்தித் துறைக்கு புத்துயிர் அளிப்பதற்கான சினோபெக்கின் நீண்டகால அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது. "சினோபெக் போட்டி தன்மை கொண்ட எரிபொருள் தயாரிப்புகள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் அதிநவீன உபகரணங்கள் இலங்கையின் பெட்ரோலிய  தொழில்துறையில் ஒழுங்குபடுத்தலின் வளர்ச்சி மற்றும் நடைமுறைப்படுத்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்று இலங்கையின் ஓரு அமைச்சர் டி.வி.சானக்க நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் மீதமுள்ள 149 நிரப்பு நிலையங்களை புதுப்பிக்கவும், 50 புதிய  எரிபொருள் நிலையங்களுக்கான வாய்ப்புகளை ஆராயவும் சினோபெக் திட்டமிட்டுள்ளது. "இலங்கையில் சினோபெக்கின் முயற்சிகள், உள்கட்டமைப்பு மற்றும் மனித மூலதன வளர்ச்சியில் மூலோபாய முதலீடுகள் மூலம் எரிசக்தி நிலப்பரப்பை மேம்படுத்துவதற்கான ஒரு பகுதியாகும்" என்று சினோபெக் லங்கா எனர்ஜி நிறுவன பொது முகாமையாளர் வாங் ஹெய்னி தெரிவித்தார்.