இலங்கை கனமழையால் 14பேர் உயிரிழப்பு
2024-06-04 09:53:30

இலங்கைப் பேரிடர் மேலாண்மை மையம் ஜூன் 2ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாட்டின் 20 பிரதேசங்கள் கனமழையினால் பாதிப்புக்குள்ளாகின. தொடர்ச்சியான புயல் காற்று மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் குறைந்தபட்சம் 14பேர் உயிரிழந்தனர். பல ஆறுகள் எச்சரிக்கை நீர் மட்டத்தை எட்டியுள்ளன. உயரமான இடங்களுக்குக் கூடிய விரைவில் இடம் பெயர வேண்டுமென ஆற்றங்கரை அருகில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.