ஐஸ்லாந்து அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டோமல்தோடிருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2024-06-04 19:36:49

ஐஸ்லாந்து நாட்டின் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டோமள்தோட்டிர் அம்மையாருக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுன் 4ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினர்.

ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், சீன-ஐஸ்லாந்து உறவு சீரான வளர்ச்சிப் போக்கினை நிலைநிறுத்தி வருகிறது. பொருளாதார மற்றும் வர்த்தக, முதலீடு, புவி வெப்ப மூலவளப் பாதுகாப்பு, பண்பாடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இரு தரப்புகளின் ஒத்துழைப்புகள் நிதானமாக முன்னேறி, புதிய சாதனைகளைப் பெற்றுள்ளன. சீன-ஐஸ்லாந்து உறவின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கிறேன். உங்களுடன் இணைந்து, இரு நாடுகள் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை ஆழமாக்கி, நலன் தரும் ஒத்துழைப்பை விரிவாக்கி, இரு நாட்டுறவை புதிய காலத்தில் காலடி எடுத்து வைப்பதை முன்னேற்ற விரும்புவதாக தெரிவித்தார்.