சீன-ஐரோப்பிய பொருளாதார உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2024-06-04 17:17:10

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் நிலை பிரதிநிதி பொரெல் ஜுன் 2ஆம் நாள் கூறுகையில், சீனாவுடன் தொடர்பை துண்டிப்பது மிகவும் கடினம் என்றும், சீனாவுடன் ஒன்றுக்கொன்று நலன் தரும் உறவைத் தொடர்ந்து நிலைநிறுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஜுன் 4ஆம் நாள் தெரிவிக்கையில், ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது, சீன-ஐரோப்பிய பொருளாதார உறவின் சாராம்சமாகும். பாதுகாப்புவாதத்துக்கு எதிர்காலம் இல்லை. திறப்பு ஒத்துழைப்பு தான் சரியான வழிமுறையாகும். உயர் நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணியை சீனா தொடர்ந்து முன்னேற்றி, பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கு அனைவரையும் உள்ளடக்கும் தன்மையுடைய வெளிப்படையான வணிக சூழலை உருவாக்கும். ஐரோப்பிய தரப்பு, தாளார வர்த்தகத்தில் ஊன்றி நின்று, பாதுகாப்புவாதத்தை எதிர்த்து, சீனாவுடன் இணைந்து இரு தரப்பு பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான நிலைமையைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.