கடல் மேலாண்மை பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2024-06-05 16:53:27

இவ்வாண்டு, ஐ.நாவின் கடல் சட்டத்துக்கான பொது ஒப்பந்தம் அமலாக்கப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவாகும். பெரும் கண்ட கடல் திட்டு மற்றும் பிரதேச அமைப்புமுறையின் அறிவியல் மற்றும் சட்டப் பிரச்சினை பற்றிய 7வது சர்வதேச ஆய்வுக் கூட்டம் ஜுன் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சரின் துணையாளர் மியௌ தேயூ இக்கூட்டத்தில் காணொளி வழியாக உரை நிகழ்த்திய போது கூறுகையில், தனியொரு நாடு, புவியமைவு அரசியல் தன்னலத்தைக் கருத்தில் கொண்டு, இப்பொது ஒப்பந்தத்தைத் தவறாக பயன்படுத்தி, ஒருதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, கடல் ஆதிக்கத்தை நாடி வருகிறது. அத்துடன், மனித குலத்தின் செயல்கள், கடல் தொழில் நுட்பத்தின் சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கம், காலநிலை மாற்றம் முதலியவை, உலக கடல் மேலாண்மைக்கு அறைக்கூவலாக அமைந்துள்ளன. சர்வதேச சமூகம் இதைக் கூட்டாக சமாளிக்க வேண்டும் என்றார்.

பல்வேறு நாடுகளின் அரசுரிமை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலனுக்கு மதிப்பு அளித்து, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும், நேர்மை மற்றும் நியாயத்தில் ஊன்றி நின்று, இரட்டை வரையறையை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, இந்தப் பொது ஒப்பந்தத்தின் கோட்பாட்டில் ஊன்றி நின்று, பலதரப்புவாத எழுச்சியைப் பின்பற்றி, உலகத்துக்கு மேலதிக கடல் சார் பொது உற்பத்திப் பொருட்களை வழங்கி, அமைதி, நிதானம், ஒத்துழைப்பின் மூலம் கூட்டு வெற்றி பெறுவது ஆகிய தன்மைகளுடைய கடல் ஒழுங்கைக் கூட்டாக உருவாக்க சீனா விரும்புவதாக அவர் வலியுறுத்தினார்.