மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான ஆளும் கூட்டணி மாபெரும் வெற்றி
2024-06-05 16:54:59

பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்தியாவின் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ), 2024 இந்திய மக்களவையில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் (இ.சி.ஐ) புதன்கிழமை அதிகாலை தனது இணையதளத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது, அடுத்த அரசாங்கத்தை அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.