சீன-இந்திய உறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விருப்பம்
2024-06-05 19:04:36

இந்திய மக்களவையில் பொது தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 5ஆம் நாள் பதிலளித்தார்.

அவர் கூறுகையில், இந்திய பொது தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு சீனா வாழ்த்து தெரிவிக்கிறது. சீரான சீன-இந்திய உறவு இரு தரப்புகளின் பொது நலன்களுக்குப் பொருந்தியது. இது மட்டுமல்ல இப்பிரதேசம் கூடவே உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் சாதகமானது. இந்தியத் தரப்புடன் இணைந்து, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களைக் கருத்தில் கொண்டு, இரு நாட்டுறவு சீரான பாதையை நோக்கி வளர்ச்சியடைவதை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.