சீன வளர்ச்சியின் திறவுச் சொல்: பசுமை வளர்ச்சி
2024-06-05 10:16:05

ஜூன் 5ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் தினமாகும். புவி, மனிதகுலத்தின் தாயகமாக திகழ்கிறது. ஆனால், மனிதர்களின் நடவடிக்கைகளால் விளைவித்துள்ள சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களை புவி எதிர்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாத்தால் தான், நமது தாயகத்தைப் பேணிக்காக்க முடியும் என்பது முழு மனிதகுலத்தின் ஒருமித்த கருத்தாகும்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த பசுமைசார் வளர்ச்சிக் கருத்தியல், அவருடைய பொருளாதாரம் மற்றும் சூழலியல் நாகரிகச் சிந்தனைகளின் மையமாக மாறியுள்ளது. புதிய யுகத்தில் சீனா புதிய வளர்ச்சி ஒழுங்குமுறையை உருவாக்குவதற்கான முக்கிய விதிமுறை மற்றும் கோட்பாட்டின் அடித்தளமாகவும் அது மாறியுள்ளது.

சீனா இந்த பசுமைசார் வளர்ச்சிச் சிந்தனையை நடைமுறையில் கொண்டு வருகிறது. சீனா, தனக்கும் உலகிற்கும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது. உலக நாடுகள்  நவீனமயமாக்கலை நனவாக்கும் முன்னேற்றப் போக்கில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு இது பதிலளிப்பதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.