தைவான் பிரச்சினை பற்றி அமெரிக்காவுக்கு சீனா வேண்டுகோள்
2024-06-05 18:37:48

தைவான் நீரிணை பற்றிய அமெரிக்காவின் கூற்று குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஜுன் 5ஆம் நாள் கூறுகையில், தைவான், சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். தைவான் பிரச்சினை, சீனாவின் உள் விவகாரமாகும். நாட்டின் அரசுரிமை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதற்கான சீன அரசு மற்றும் மக்களின் மனவுறுதியை, எந்த நிர்பந்தமும், அச்சுறுத்தலும் அசைக்க முடியாது என்றார்.

அமெரிக்கத் தரப்பு, ஒரே சீனா என்ற கோட்பாடு மற்றும் சீன-அமெரிக்க மூன்று கூட்டறிக்கைகளைப் பின்பற்றி, எந்த வழிமுறையிலும், தைவான் சுதந்திர சக்திகளுக்கு தவறான சமிக்கையை தருவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.