லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பதட்டத்தைத் தணிவுப்படுத்த வேண்டும்:ஐ.நா.
2024-06-06 09:55:16

ஜுன் 5ஆம் நாள் ஐநா தலைமைச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளரிடம் பேட்டி அளித்த போது, லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்காலிக எல்லையின் நிலைமையைத் தணிவுப்படுத்தும் வகையில், தொடர்புடைய தரப்புகளுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா. வேண்டுகோள் விடுத்தது.

அவர் மேலும் கூறுகையில், லெபனானுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான தற்காலிக எல்லைப் பகுதியில் தொடர்ந்து வளர்ந்து வரும் பதட்ட நிலைமை குறித்து ஐ.நா. அக்கறை கொண்டுள்ளது. தொடர்புடைய தரப்புகள் பல்வேறு அமைப்பு முறைகளின் மூலம், தற்போதைய நிலைமையைத் தணிவுப்படுத்தலாம். குறிப்பாக ஐ.நாவின் அமைதி காப்பு படை, முத்தரப்பு சந்திப்பு அமைப்புமுறையை ஏற்பாடு செய்யலாம் என்றார்.