இலங்கையில் 10 புதிய தாவரவியல் பூங்காக்கள் திட்டம்
2024-06-06 17:13:55

இலங்கையில் காலநிலை நிலைமைகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் 10 புதிய தாவரவியல் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக அந்நாட்டின் தலைமையமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

மேலும் குணவர்தன கூறுகையில், நாட்டின் தெற்கில் கால்லி மற்றும் டென்னியாய, வடக்கில் வவுனியா, கிழக்கில் அம்பாறை மற்றும் வட-மத்திய இலங்கையில் பொலன்னறுவா ஆகிய இடங்களில் இப்பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கால்லியில் அமைக்கப்படவுள்ள பூங்கா, மாங்ரோவ் தாவரவியல் பூங்காவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

"இந்த முயற்சியின் பலன்களை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல், பள்ளி குழந்தைகள் உள்பட நாடு முழுவதும் உள்ள மக்கள், பயன் பெறுவார்கள் என்று குணவர்தன கூறினார்.

இலங்கையில் அமைக்கப்பட உள்ள தாவரவியல் பூங்காக்கள் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதுடன் அரசாங்கத்திற்கு பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் என்றார்.