காலநிலை மாற்றத்தை சமாளிக்க சர்வதேச சமூகத்துக்கு குட்ரைஸ் வேண்டுகோள்
2024-06-06 19:17:19

ஜுன் 5ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கி, சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரைஸ் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் கூறுகையில், தட்ப வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கடல் மட்டத்தின் சீற்றம் ஏற்படக்கூடிய உயர்வு, வெப்ப மண்டலத்தின் பவளப் பாறை முறைமை மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுக்கான பாதிப்பு, வானிலை நிலைமைக்கான சீர்குலைவு முதலிய விளைவுகள் ஏற்படக்கூடும் என்று தெரிவித்தார்.

எரியாற்றல் முறை மேம்பாடு, பசுங்கூட வாயு வெளியேற்றத்தைப் பெருமளவில் குறைப்பது, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கு நிதி திரட்டலை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். தீவிர வானிலைக்கு ஏற்ப தேவைப்படும் நிதி இன்னமும் போதுமானதாக இல்லை. 2025ஆம் ஆண்டு வரை இந்நிதியை ஒரு மடங்கு அதிகரித்து, ஆண்டுதோறும் குறைந்தது 40 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் வாக்குறுதியை அனைத்து வளர்ந்த நாடுகளும் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.