சீனாவின் மொத்த இறக்குமதி ஏற்றுமதித் தொகை அதிகரிப்பு
2024-06-07 15:22:39

 

சீனச் சுங்கத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில், சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் மொத்த இறக்குமதி ஏற்றுமதித் தொகை 17லட்சத்து 50ஆயிரம் கோடி யுவானை எட்டி கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 6.3விழுக்காடு அதிகமாகும். அவற்றில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை முறையே, 9லட்சத்து 95ஆயிரம் கோடி யுவான் மற்றும் 7லட்சத்து 55ஆயிரம் கோடி யுவானைத் தாண்டின. கடந்த ஆண்டில் இருந்ததை விட, முறையே 6.1 மற்றும் 6.4விழுக்காடு அதிகமாகும்.

இவ்வாண்டு, சீனப் பொருளாதாரம் சீரான போக்கில் வளர்ந்துள்ளது. வெளிநாட்டு வர்த்தகமும் சீராக வளர்ந்து வருகிறது என்று சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் புள்ளியியல் பகுப்பாய்வு துறையின் தலைவர் லியுதைலியாங் தெரிவித்தார்.

மேலும், புள்ளிவிவரங்களின்படி, வியட்நாம், ஜெர்மனி, பிரான்ஸ், சிலி முதலிய நாடுகளிலிருந்து வேளாண் உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி முறையே 12.7விழுக்காடு, 20.5விழுக்காடு, 8.6விழுக்காடு மற்றும் 13.7விழுக்காடு அதிகரித்தன.