இலங்கையும் மாலைதீவும் பொருளாதார ஒத்துழைப்புக்கான புதிய உடன்படிக்கைகளில் கையெழுத்து
2024-06-07 17:23:48

இலங்கைக்கும் மாலத்தீவுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புதிய உடன்படிக்கைகள் கையெழுத்திட உள்ளதாக இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு வெளிவிவகாரத்துறை அமைச்சர் மூசா ஜமீர் இலங்கை பிரதமர்  தினேஷ் குணவர்தனவை வியாழக்கிழமை சந்தித்தார்ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் வர்த்தகம், முதலீடு, கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆராய்வது குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

இலங்கையுடனான உறவுகளை விரிவுபடுத்துவதற்கு மாலத்தீவு  மிகவும் ஆர்வமாக உள்ளது என்றும், இருதரப்பு உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு குறிப்பாணைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் ஜமீர் கூறினார்.

மாலத்தீவுவின் அனைத்து பரிந்துரைகளையும் செயல்படுத்த முழு ஒத்துழைப்பை வழங்குவதாக கூறிய இலங்கை பிரதமர், சுற்றுலா மற்றும் எரிசக்தி துறையில், குறிப்பாக சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.