அமெரிக்க அரசுத் தலைவரின் கூற்றுக்கு சீனாவின் பதில்
2024-06-07 17:19:20

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு பற்றிய அமெரிக்க அரசுத் தலைவர் ஜோன் பைடனின் கூற்று குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஜுன் 7ஆம் நாள் கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முன்வைக்கப்பட்ட 10 ஆண்டுகளில், 150க்கும் மேலான நாடுகள் மற்றும் 30க்கும் மேலான சர்வதேச அமைப்புகளுடன், 200க்கும் மேலான ஒத்துழைப்பு ஆவணங்களில் சீனா கையொப்பமிட்டுள்ளது. உலகளவில் மிகப் பெருமளவிலான சர்வதேச ஒத்துழைப்பு மேடையான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம், தொடர்புடைய நாடுகளின் மக்களுக்கு உண்மையான நலன்களை வழங்கி, சர்வதேச சமுகத்தின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் மிக ஆக்கமுடன் பங்கெடுத்த பிரதேசங்களில் ஒன்றாக ஆப்பிரிக்கா திகழ்கிறது. இக்கட்டுமானத்தின் காரணமாக, ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் முதலாவது உயர் வேக நெடுஞ்சாலை, கடலைக் கடப்பதற்கான பாலம், தொழில் துறை பூங்கா முதலியவை உள்ளன. ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு அமெரிக்கா உண்மையாக பங்காற்ற வேண்டும் என சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.