சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
2024-06-07 19:15:02

சீனத் தேசிய அன்னிய செலாவணி நிர்வாகம் வெளியிட்ட தரவின்படி, 2024ஆம் ஆண்டின் மே திங்கள் இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, 3 லட்சத்து 23 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டாலராகும். இது கடந்த ஏப்ரல் திங்கள் இறுதியில் இருந்ததை விட 3 ஆயிரத்து 120 கோடி அமெரிக்கா டாலர் அதிகரித்தது.

2024ஆம் ஆண்டு மே திங்கள், அமெரிக்க டாலர் குறியீட்டு எண் குறைந்து, உலக நாணய சொத்து விலை பொதுவாக உயர்ந்தது. அந்த திங்கள், மாற்று விகிதம் மற்றும் சொத்து விலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளால், சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்தது. சீனப் பொருளாதாரத்தின் இயக்கு ஆற்றலும், பொருளாதார மீட்சியின் சீரான போக்கும் தொடர்ந்து வலுவடைந்து வருவது, அன்னிய செலாவணி கையிருப்பு அளவின் நிலைத்தன்மைக்கு ஆதரவு அளிக்கும்.