ஐ.நா. கூட்டத்தில் சர்வதேச நாகரிக நாள் பற்றிய தீர்மானம் நிறைவேற்றம்
2024-06-08 15:13:31

நாகரிகங்கள் குறித்த உரையாடலுக்கான சர்வதேச நாள் தொடர்பான தீர்மானம் ஒன்று ஜுன் 7ஆம் நாள் நடைபெற்ற ஐ.நா. பொதுப் பேரவையின் 78ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு, ஜுன் 10ஆம் நாளை நாகரிகங்கள் குறித்த உரையாடலுக்கான சர்வதேச தினமாக அனுசரிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தில், அனைத்து நாகரிகங்களின் சாதனைகளும், மனிதகுலத்தின் பொதுவான செல்வமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாகரிகங்களின் பல்வகைத்தன்மைக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்னும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதோடு, நாகரிகங்களிடையேயான உரையாடல்,  உலகின் அமைதியை பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியை மேம்படுத்தி, மனிதகுலத்தின் நலன்களை அதிகரித்து, கூட்டாக முன்னேற்றம் அடைவதற்கு முக்கிய பங்காற்றும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா. கூட்டத்தில் நிறைவற்றப்பட்ட இநதத் தீர்மானம், சீனாவினால் முன்வைக்கப்பட்டதாகும்.