மத்திய காசா பகுதியிலுள்ள அகதிகள் முகாம் மீது தாக்குதலில் 210 பேர் பலி
2024-06-09 17:35:38

மத்திய காசா பகுதியிலுள்ள நுசேய்ராட் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் ஜுன் 8ஆம் நாள் தாக்குதல் நடத்தியதால், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 210 பேர் உயிரிழந்தனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஹமாஸ் இயக்கத்தின் செய்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை, இஸ்ரேல் ராணுவம் இதற்கு பதிலளிக்கவில்லை.