அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் உயர் வெப்பநிலை தாக்குதல்
2024-06-09 19:50:20

அண்மையில், அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதி அதிதீவிர வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் 3கோடியே 10இலட்சத்துக்கும் மேலானோருக்கு அமெரிக்கத் தேசிய வானிலை பணியகத்தின் வெப்பத் தாக்குதல் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜுன் 7ஆம் நாளன்று தென்மேற்குப் பகுதியில் உள்ள பல மாநிலங்களின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசைத் தாண்டியது. மேற்குப் பகுதியின் பல இடங்களில், கோடைக்காலத்தின் துவக்ககாலத்தின் காணப்பட்ட உயர் வெப்பநிலை பதிவுகளைத் தாண்டி அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.  நெவாடாவின் லாஸ்வேகாஸில், 7ஆம் நாள் அதிகபட்ச வெப்பநிலை 48.3 டிகிரி செல்சியஸை எட்டியது. அரிசோனா தலைநகர் பீனிக்ஸ் நகரில் 6ம் நாள் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை எட்டியது.

தவிர, கடந்த வாரத்தில் அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் உயர் வெப்பநிலை காரணமாக, சிலர் உயிரிழந்தனர் மற்றும் சிலர் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.