நாகரிகங்கள் உரையாடலுக்கான சர்வதேச தினம், பண்பாட்டு பல்வகைமைக்கு மரியாதை அளிக்க உதவுகிறது: ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர்
2024-06-10 19:41:20

ஜுன் 10ஆம் நாள், நாகரிகங்கள் உரையாடலுக்கான முதலாவது சர்வதேச தினமாகும். இதை முன்னிட்டு, ஐ.நா. துணைப் பொதுச் செயலாளரும் ஐ.நா. நாகரிகங்கள் கூட்டணிக்கான உயர்நிலை பிரதிநிதியுமான மிகுல் மோரடினோஸ் 9ஆம் நாள் ஓர் ஊடக அறிக்கையில், இச்சர்வதேச தின நிகழ்ச்சியை வரவேற்பதாகவும், பன்னாட்டுச் சமூகம், பண்பாட்டு பல்வகைமை மற்றும் வேற்றுமை ஆகியவற்றுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

நாகரிகங்களிடையேயான உரையாடல்,  பண்பாட்டு பல்வகைமையின் முக்கியத்துவம் மீதான புரிந்துணர்வை மேம்படுத்த உதவுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாகரிகங்கள் உரையாடலுக்கான சர்வதேச தினம் தொடர்பாக சீனாவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஜுன் 7ஆம் நாளன்று ஐ.நா. பொதுப் பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.