சீனாவின் மென்பொருள் மற்றும் தொழில் நுட்ப சேவை துறை விரைவான வளர்ச்சி
2024-06-10 16:55:12

சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 4 மாத காலத்தில், சீனாவின் மென்பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை துறை நிலையான வளர்ச்சி அடைந்தது. மென்பொருள் சேவை துறையின் வருவாய் 3இலட்சத்து 80ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டைக் காட்டிலும் 11.6விழுக்காடு அதிகரித்தது.

மென்பொருள் சார் துறையில், தகவல் தொழில் நுட்ப சேவை பகுதியின் வருமானம் விரைவான வளர்ச்சி அடைந்தது. முதல் 4 மாதங்களில், அதன் வருமானம் 2இலட்சத்து 49ஆயிரத்து 830கோடி யுவானை எட்டியது, கடந்த ஆண்டை காட்டிலும் 13.2விழுக்காடு அதிகம். மேகக் கணிமை, பெருந்தரவு ஆகியவற்றின் எல்லா வருமானமும் 41ஆயிரத்து 70கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டை விட 14.3விழுக்காடு அதிகரித்தது.