அமெரிக்க விஸ்கான்சினில் துப்பாக்கி சூடு சம்பவம்
2024-06-10 17:00:23

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத் தலைநகர் மேடிசனில், 9ஆம் நாள் காலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.

9ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மேடிசன் நகரின் காவற்துறைத் தலைவர் கூறுகையில், நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரையில் நடந்த விருந்தில், துப்பாக்கி சூடு நடந்ததாகவும், காயமடைந்தவர்கள், 14முதல் 23வயது வரையிலானவர்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும், குறிப்பிட்ட இலக்குடன் துப்பாக்கி சூடு நடந்ததாகவும், சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், காவற்துறை தெரிவித்தது.