அர்ஜெண்டினாவில் 5லட்சம் பேருக்கு டெங்குக் காய்ச்சல் பாதிப்பு
2024-06-10 16:42:37

2024ஆம் ஆண்டில் தற்போது வரை அர்ஜெண்டினாவில் 5லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்குச் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் 9ஆம் நாள் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளை விட, இவ்வாண்டு டெங்கு நோய் மேலும் பெருமளவில் பரவியுள்ளது.

நாடளவில் டெங்குக் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்றும்,  மக்கள் பாதுகாப்பை பலப்படுத்தும் விழிப்புணர்வுடன், தொடர்புடைய நோய் அறிகுறிகள் தோன்றினால் தாமதமின்றி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.