சட்டத்திற்குப் புறம்பான வாகன நிறுவனங்கள் மீது தண்டனை: ஜப்பான்
2024-06-11 11:27:23

டொயோட்டா மோட்டார் நிறுவத்தின் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள், ஜப்பானின் தேசிய வரையறையை மீறி வருகிறது. தவிரவும், ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பா உள்ளிட்ட 62 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் பின்பற்றி வரும் ஐ.நாவின் கூட்டு வரையறைகளுக்கும் இந்நிறுவனம் புறம்பானது. வாகனங்களுக்கான மேற்கூறிய வரையறை இருந்தால், ஐரோப்பா மற்றும் பிற பிரதேசங்களில் வாகனங்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட முடியாது என்று ஜப்பானின் நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகம் 11ஆம் நாள் வெளியிட்டது.

தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை பணிகளை மேற்கொண்டு, சாலை போக்குவரத்து வாகனச் சட்டத்தின்படி, இத்தகைய நிறுவனங்களுக்குத் தண்டனையை இவ்வமைச்சகம் விதிக்கும்.