மலாவி துணை அரசுத் தலைவர் பயணித்த விமானம் விபத்து: பயணித்த அனைவரும் உயிரிழப்பு
2024-06-11 19:43:12

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அரசுத் தலைவர் சவ்லோஸ் க்ளாஸ் சிலிமா பயணித்த ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியது. அவருடன் விமானத்தில் பயணித்த 9 பேரும்  உயிரிழந்தனர் என்று 11ஆம் நாள்  உறுதிப்படுத்தப்பட்டது.

சிலிமா பயணம் செய்த ராணுவ விமானம் 10ஆம் நாள் தொடர்பை இழந்து மாயமாகியதாக  அரசுத் தலைவர் மற்றும் அமைச்சரவை அலுவலகம் 10ஆம் நாள் தெரிவித்தது.