காசா பற்றிய வரைவுத் தீர்மானத்துக்குச் சீனா ஆதரவு
2024-06-11 09:49:48

அமெரிக்கா தாக்கல் செய்யப்பட்ட காசா பிரதேசம் தொடர்பான வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பவை ஜூன் 10ஆம் நாள் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி பாலஸ்தீன ஹமாஸ் இயக்கமும் இஸ்ரேலும் போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாக்கெடுப்புக்கு பின், ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி ஃபுஸூங் விளக்க உரையை நிகழ்த்தினார். நிலையான போர் நிறுத்தத்தை நிபந்தனையின்றி உடனடியாக நனவாக்க வேண்டும் என்றும், நிலையான போர் நிறுத்தத்தின் நனவாக்கத்தை முன்னேற்ற, இவ்வரைவுத் தீர்மானம் தாக்கல் செய்த நாடு பொறுப்பான மனப்பான்மையுடன் மனமார்ந்த முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பவை உறுப்பு நாடுகளின் முன்மொழிவுகளின்படி, இவ்வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா திருத்தினாலும், அதில் தெளிவில்லாத பகுதிகள் உள்ளன. ஆனால், உயிரிழப்பைத் தடுத்து மனிதாபிமான பேரிழவைத் தணிவடையும் அவசர தேவைக்கிணங்க, இத்தீர்மானத்தைச் சீனா ஆதரித்து வாக்களித்தது என்று ஃபுஸூங் கூறினார்.