சீனப் பிரதிநிதி சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு கவுன்சிலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2024-06-11 10:10:30

ஜூன் 10ஆம் நாள், ஜெனீவாவில் நடைபெற்ற 112வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கவுன்சில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தது. சீனத் தொழிற்சங்கத்தின் பிரதிநிதியும் அனைத்துச் சீனத் தொழிற்சங்கச் சம்மேளனத்தின் துணைத் தலைவரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி செயலகத்தின் செயலாளருமான வீ டிச்சுன் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு கவுன்சிலின் தலைவராக வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு என்பது தொழிலாளர் விவகாரங்களுக்கு பொறுப்பான ஐ.நா.வின் சிறப்பு நிறுவனமாகும். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படும்.