நரேந்திர மோடிக்கு சீனத் தலைமையமைச்சர் வாழ்த்து செய்தி
2024-06-11 20:17:32

இந்திய குடியரசு தலைமை அமைச்சராக மீண்டும் பதவி ஏற்ற நரேந்திர மோடிவுக்கு சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 11ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

லீச்சியாங் கூறுகையில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு சீராகவும் நிலையாகவும் வளர்வது, இரு நாட்டு மக்களின் நலன்களை அதிகரிப்பதற்கு மட்டுமல்ல, முழு உலக மற்றும் பிராந்தியத்துக்கு நிலைப்புத்தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலும் அளிப்பதாக தெரிவித்தார். இந்தியாவுடன் இணைந்து, இரு நாட்டுறவை சரியான திசையில் முந்தி செல்வதில் பணியாற்ற சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.