சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி குறியீடு வெளியீடு
2024-06-11 14:56:36

சீனாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனச் சங்கம் 11ஆம் நாள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி குறியீட்டை வெளியிட்டுள்ளது. மே திங்களில், இந்த குறியீடு 89.2 ஆகும். ஏப்ரல் திங்களில் இருந்ததை விட 0.2 விழுக்காடு குறைந்துள்ளது. தவிரவும், 2023ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்த 88.9 விட இந்த குறியீடு அதிகம்.

மே திங்களில் இந்த குறியீட்டின்படி, தற்போதைய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மீதான எதிர்பார்ப்பு மீட்சிச் செய்யப்பட வேண்டும். தேவை பற்றாக்குறை, செலவு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளில் இத்தகைய நிறுவனங்கள் சிக்கியுள்ளன. எதிர்காலத்தில், பொருளாதாரத்திற்கான ஆதரவுகளை தொடர்புடைய வாரியங்கள் அதிகரித்து, சமூகத்தின் பன்நோக்கு நிதி திரட்டல் செலவுகளைக் குறைத்து, அரசு சாரா பொருளாதார வளர்ச்சிக்கான பன்நோக்குச் சேவை மேடையை உருவாக்குவதை விரைவுபடுத்துவது முதலிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று இச்சங்கம் தெரிவித்துள்ளது.