சீனாவின் பழைய நண்பரின் வீட்டில் சிறந்த விருந்து
2024-06-11 19:57:09


சீனாவின் துவன்வூ திருவிழாவான (டிராகன் படகு திருவிழா) ஜுன் 10ஆம் நாள் அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் சாரா லாண்டி அம்மையாரின் வீட்டில் ஒரு சிறப்பு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருந்தில், சீன மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள், சீன உணவுகளை ருசித்து, துவன்வூ விழாவைக் கொண்டாடி மகிழ்ந்ததுடன், சீனாவின் பாரம்பரிய பண்பாடுகளையும் அறிந்து கொண்டனர்.

இந்த சிறப்பு நிகழ்ச்சி, சீன ஊடக குழுமம் மற்றும் சிகாகோவிலுள்ள சீனத் துணை தூதரகம் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முயற்சி சீன-அமெரிக்க மக்களிடையே தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்பு விருந்துக்கு தயார் செய்யும் விதமாக, சாரா லாண்டி சீனாவின் துவன்வு திருவிழாவின் வரலாறு மற்றும் பண்பாட்டுப் பின்னணி ஆகியவற்றை விரிவாக அறிந்து கொண்டு, சீன சமையல் கலைஞருடன் இணைந்து உணவுப் பட்டியலை வடிவமைத்தார். டிராகன் படகு மூலம் வாழ்த்துக்கள் என்ற புதுமையான உணவு, துவன்வு திருழாவில் டிராகன் படகுப் போட்டி பற்றிய பழக்க வழக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.