சீனத் தேசிய இருப்புப்பாதை நிலையான சொத்து முதலீட்டுத் தொகை உயர்வு
2024-06-11 14:29:16

இவ்வாண்டின் ஜனவரி முதல் மே திங்கள் வரை, சீனத் தேசிய இருப்புப்பாதை நிலையான சொத்து முதலீட்டுத் தொகை 22847 கோடி யுவானை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10.8 விழுக்காடு அதிகமாகும். நவீனமயமாக்க இருப்புப்பாதை அடிப்படை அமைப்பின் கட்டுமானம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என்று சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமம் தெரிவித்தது.