சீனாவின் பெய்ஜிங், தியென்ஜின் மற்றும் ஹெபெயின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை வரலாற்றில் புதிய பதிவு
2024-06-11 14:53:46

இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில், சீனாவின் பெய்ஜிங், தியென்ஜின், ஹெபெய் ஆகிய பகுதிகளின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை 2லட்சத்து 14ஆயிரம் கோடி யுவானை எட்டி வரலாற்றில் முன்பு கண்டிராத புதிய பதிவை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, அது 5விழுக்காடு அதிகரித்ததோடு, சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகையில் 12.2விழுக்காட்டை வகித்துள்ளது. அவற்றில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவில் சேர்ந்த நாடுகளுக்கான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை ஒரு லட்சத்து 6ஆயிரம் கோடி யுவானைத் தாண்டி கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 4.6விழுக்காடு அதிகமாகும்.