பிரிக்ஸ் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
2024-06-12 19:27:34

ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஜுன் 11ஆம் நாள் பங்கேற்று உரை நிகழ்த்தினார். இது, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் விரிவாக்கத்துக்கு பிறகு நடைபெற்ற முதலாவது ‘பிரிக்ஸ் பிளாஸ்’ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம். புதிதாக வளரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளை மையப்படுத்தி, பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கியுள்ள முக்கிய உரைடாயல் அரங்கமாக ‘பிரிக்ஸ் பிளாஸ்’ திகழ்கிறது. இது, தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கு ஒரு கொடி போல் பங்காற்றி வருகிறது என்று வாங் யீ கூறினார்.

கதவை திறந்து வளர்ச்சியை நாடும் விதமாகவும் திறந்த மனதுடன் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் விதமாகவும் பிரிக்ஸ் தொடர்ந்து செயல்படுவதற்கு சீனா ஆதரவு அளிக்கிறது. மேலதிக கூட்டாளிகள் பிரிக்ஸ் குடும்பத்தில் இணைவதை சீனா வரவேற்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சிக்கலான நிலைமையை சமாளிப்பதற்காக, பொதுவான பாதுகாப்பை பேணிக்காத்து, அறைகூவல்களை கூட்டாகச் சமாளிக்க வேண்டும். வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து முன்னேற்றம் அடைவதற்கான சக்திகளை ஒன்று திரட்ட வேண்டும்.  நியாயம் மற்றும் நீதியைக் கடைப்பிடித்து, உலகளாவிய ஆட்சிமுறையை முழுமைப்படுத்த வேண்டும் என்று சீனா கருதுவதாகவும் அவர் கூறினார்.