சீனாவில் பசுமை மின்னாற்றல் நுகர்வு 327 சதவீதம் வளர்ச்சி
2024-06-12 19:12:21

இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில், சீனாவில் பசுமை மின்னாற்றல்  நுகர்வு, 18710 கோடி கிலோவாட் மணியை எட்டியதோடு, கடந்த ஆண்டை விட 327 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2023ஆம் ஆண்டு நாடு முழுவதும் பசுமை மின்னாற்றல் வர்த்தகம் முதல்முறையாக 10ஆயிரம் கிலோவாட் மணியைத் தாண்டியது. இது, முந்தைய ஆண்டை விட 281.4 விழுக்காடு அதிகம்.

பசுமை மின்னாற்றல் என்பது காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும்.