இஸ்ரேல் படையின் செயல் போர் குற்றம்: ஐ.நா. கருத்து
2024-06-12 10:06:41

இஸ்ரேல் படை 8ஆம் நாள் தடை காவலில் வைக்கப்பட்ட 4பேரை மீட்ட போது, காசா பகுதியில் அதிகமான அப்பாவி மக்களின் உயிரிழப்பை ஏற்படுத்தியது குறித்து மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அலுவலகம் 11ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பெரும் அதிர்ச்சியைத் தெரிவித்ததோடு, இஸ்ரேல் படையின் இச்செயல் போர் குற்றமாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இஸ்ரேல் படையின் இச்செயல் முறை அழிவு தரும் விளைவை ஏற்படுத்தியது என்று மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்மி லாரன்ஸ் தெரிவித்தார்.