சீனாவின் நகரவாசி நுகர்வு விலை உயர்வு
2024-06-12 11:06:52

2024ஆம் ஆண்டின் மே திங்களில், சீனத் தேசிய நகரவாசி நுகர்வு விலை, கடந்த ஆண்டின் அதே காலத்தைக் காட்டிலும் 0.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த குறியீடு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் முறையே 0.3 விழுக்காடு, 0.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. உணவு விலை 2 விழுக்காடு குறைந்துள்ளது. உணவு சாரா விலை 0.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. சேவை விலை 0.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் முதல் 5 திங்கள் காலத்தில், சீனத் தேசிய நகரவாசி நுகர்வு விலை, கடந்த ஆண்டின் அதே காலத்தைக் காட்டிலும் 0.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இவ்வாண்டின் மே திங்களில், சீனத் தொழிற்துறை தயாரிப்பாளர் விலைக் குறியீடு, கடந்த ஆண்டின் அதே காலத்தைக் காட்டிலும் 1.4 விழுக்காடு குறைந்துள்ளது. ஏப்ரல் திங்களில் இருந்ததை விட 0.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. சீனத் தொழிற்துறை தயாரிப்பாளர்கள் கொள்வனவு விலை, கடந்த ஆண்டின் அதே காலத்தைக் காட்டிலும் 1.7 விழுக்காடு குறைந்துள்ளது. ஏப்ரல் திங்களில் இருந்ததை விட 0.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் முதல் 5 திங்கள்காலத்தில், தொழிற்துறை உற்பத்தி விலை, கடந்த ஆண்டின் அதே காலத்தைக் காட்டிலும் 2.4 விழுக்காடு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.