இலங்கைக்கு 33 கோடி கடன்:ஐ.எம்.எப்
2024-06-13 14:46:02

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு 12ஆம் நாள், அமெரிக்காவிலுள்ள தலைமையகத்தில் நடத்திய கூட்டத்தில் இலங்கைக்கு இடைக்கால கடன் திட்டம் பரிசீலனை செய்யப்பட்டது. அதன்படி, இலங்கைக்கு 33 கோடியே 60 இலட்சம் அமெரிக்க டாலர் கடன் வழங்க முடிவெடுக்கப்பட்டது. இது வரை, இலங்கைக்கு மொத்தமாக 100 கோடி டாலர் நிதியுதவியை இந்நிதியம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.