சீன மற்றும் நியூசிலாந்து தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
2024-06-13 16:16:25

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜுன் 13ஆம் நாள் பிற்பகல், நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனிலுள்ள அரசு மாளிகையில், அந்நாட்டுத் தலைமையமைச்சர் கிறிஸ்டோபர் லக்ஸனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சேவை வர்த்தகம், வணிகச் சூழல், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விவசாய மற்றும் உணவு பொருட்கள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், அறிவுசார் காப்புரிமையின் பரிசீலனை, இடம்பெயரும் பறவைகளின் பாதுகாப்பு முதலிய துறைகளில் இரு தரப்புகளின் ஒத்துழைப்பு ஆவணங்களில் தலைமையமைச்சர்கள் முன் கையெழுத்தாகின. பின்னர் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இரு நாட்டுத் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை பற்றிய கூட்டு அறிக்கையை அவர்கள் வெளியிட்டனர்.