சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் சீரான வளர்ச்சி
2024-06-13 09:25:35

சீனப் பயணியர் வாகன சங்கம் 11ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் மே திங்கள் வரை, சீன வாகனங்களின் ஏற்றுமதி 24லட்சத்து 50ஆயிரத்தை எட்டி கடந்த ஆண்டை விட, 27விழுக்காடு அதிகரித்தது. அவற்றில், புதிய எரியாற்றல் வாகனங்களின் ஏற்றுமதி சீனாவின் வெளிநாட்டு வர்த்தக அதிகரிப்பின் முக்கிய உந்து ஆற்றலாக மாறியுள்ளது.

முழுமையான தொழில் சங்கிலி மற்றும் விநியோக சங்கிலி அமைப்பு முறை, நிலையான புத்தாக்கத்துடன் தொழில்நுட்ப மற்றும் வணிக சின்னத்தின் மேம்பாடு, சீனாவின் மிகப் பெரிய சந்தை வாய்ப்பு மற்றும் வளமான மனித வள மேம்பாடு ஆகியவை சீனத் தொழில்நிறுவனங்களின் போட்டியாற்றலுக்கான காரணிகளாகும் என்று இச்சங்கத்தின் தலைமை செயலாளர் ஸ்வேதுங்ஷூ தெரிவித்தார்.

உலகத்துக்குப் பதிய உற்பத்திப் பொருட்களைச் சீனா வழங்கி வருவதோடு, புதிய வளர்ச்சி வாய்ப்பு மற்றும் பெரிய சந்தை வாய்ப்பையும் உலகத்துடன் பகிர்ந்து கொண்டு வருகிறது. புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில் சீன சரக்குகளின் இறக்குமதித் தொகை கடந்த ஆண்டைக் காட்டிலும், 6.4விழுக்காடு அதிகரித்தது. இறக்குமதி அளவு நிலையாக விரிவாகி வருகிறது.

சீனப் பொருளாதாரம் தொடர்ச்சியாகச் சீராக வளர்ந்து வருவதோடு, சீனாவின் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிக்கு மேலதிக நன்மைகள் கிடைத்துள்ளன. அதோடு, உலகத்துக்கும் மேலதிக நன்மைகள் கிடைத்துள்ளதை இது காட்டுகிறது.