கியூபாவுக்கு ரஷிய கடற்படை கப்பல் குழு வருகை
2024-06-13 16:23:31

ரஷியாவின் வடக்கு கடற்படையைச் சேர்ந்த கப்பல் குழு ஒன்று 12ஆம் நாள் விடியற்காலையில், கியூபாவின் ஹவானா துறைமுகத்தை சென்றடைந்து, அந்நாட்டில் 6 நாள் பயணம் தொடங்கியது.

கியூபா புரட்சி ஆயுத ஆற்றல் ஜூன் 6ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, ரஷியாவின் கடற்படையின் கப்பல் குழுவின் பயணம், இரு நாடுகளின் வரலாற்று நட்புறவுக்கும் தொடர்புடைய சர்வதேச விதிகளுக்கும் பொருந்தியது. கடற்படை கப்பல்களில் அணு ஆயுதங்கள் இடம்பெறவில்லை. இக்கப்பல் குழு கியூபாவில் பயணம் மேற்கொள்ளும் போது, பிரதேசத்திற்கு அச்சுறுத்தலாக அமையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.