சீனாவின் சரக்கு வர்த்தக வளர்ச்சி நிலைமை
2024-06-14 19:49:36

மே திங்களில், சீனாவின் சரக்கு வர்த்தகம் நிலையான வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்ததை நிலைநிறுத்தியது என்று சீன வணிகத் துறை அமைச்சகம் 14ஆம் நாள் தெரிவித்தது. இதில், நுகர்வுக்கான மின்னணு தயாரிப்புகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், உயர் மதிப்புக்கூட்டு இயந்திர மின்சாரத் தயாரிப்புகள் ஆகிய மூன்று வகைகளின் தேவை நிலையாக இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டது.

சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹெ யாடொங் கூறுகையில், இவ்வாண்டின் பிற்பாதியில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம், இன்னும் சிக்கலான நிலைமையை எதிர்கொள்கின்றது. இத்தகைய சிரமங்களை தொழில் நிறுவனங்கள் சமாளிக்க உதவி அளிப்பதோடு, தொடர்ந்து வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிக்கான புதிய இயக்க ஆற்றலை வளர்க்க வணிகத் துறை அமைச்சகம் முயற்சி செய்யும் என்று தெரிவித்தார்.