இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு சீன வெளியுறவு அமைச்சரின் வாழ்த்து
2024-06-14 20:01:45

இந்திய வெளியுறவு அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள எஸ். ஜெய்சங்கருக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஜுன் 12ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில்

சீனாவும் இந்தியாவும் சீரான உறவை நிலைநிறுத்துவது, இரு நாடுகளின் பொதுவான நலன்களுக்குப் பொருத்தமாகவும், பிராந்தியம் மற்றும் உலகின் அமைதி, நிலைப்புத்தன்மை, வளர்ச்சி மற்றும் வளம் ஆகியவற்றுக்கு உதவி புரிவதாகவும் இருக்கும். ஒன்றுக்கொன்று வளர்ச்சி வாய்ப்பை உருவாக்கி, ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லாதிருப்பது குறித்து இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்தை நடைமுறையில் கொண்டு வரவும், சீன-இந்திய உறவை சீரான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்லவும் ஜெய்சங்கருடன் இணைந்துப் பணியாற்ற விரும்புகின்றேன் என்று வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.