ஏமன் நிலைமை பற்றிய வெளிப்படைக் கூட்டம்
2024-06-14 10:04:28

ஐ.நா.பாதுகாப்பவை ஏமன் நிலைமை பற்றி ஜூன் 13ஆம் நாள் வெளிப்படைக் கூட்டத்தை நடத்தியது. இதில், ஹௌதி ஆயுதப்படையினரால் தடைக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஐ.நா பணியாளர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்குமாறு ஐ.நா.வுக்கான சீனத் துணை நிரந்தரப் பிரதிநிதி கெங் சுவாங் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். சர்வதேச சட்டத்தின் படி செங்கடல் நீரில் செல்லும் அனைத்து நாடுகளின் வணிகக் கப்பல்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி, செங்கடல் நீரின் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டும். தொடர்புடைய தரப்புகள் கட்டுப்பாட்டுடன் இருந்து, பதற்ற நிலைமையைத் தீவிரமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக கடந்த வாரம் ஹௌதி ஆயுதப்படையினர் ஐ.நா.வின் 13 பணியாளர்கள் மற்றும் ஐந்து சர்வதேச அரசு சாரா நிறுவனங்களின் பணியாளர்களைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக ஏமன் பிரச்சினைக்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதர் ஹான்ஸ் கிராண்ட்பெர்க் தெரிவித்தார்.