லாங்மார்ச்-10 ஏவூர்தியின் துணை நிலை உந்து ஆற்றல் அமைப்பின் பரிசோதனை வெற்றி
2024-06-14 19:50:47

சீனாவின் லாங்மார்ச்-10 தொகுதியைச் சேர்ந்த ஏவூர்தியின் துணை நிலை உந்து ஆற்றல் அமைப்பின் பரிசோதனை ஜுன் 14ஆம் நாள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

மூன்றரை நிலைகள் கொண்ட லாங் மார்ச் -10 ஏவூர்தி எதிர்காலத்தில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

இது 92.5 மீட்டர் மொத்த நீளம், சுமார் 2189 டன் எடையிலானது. சுமார் 2678 டன் உந்து ஆற்றலுடன் பறந்து செல்லக் கூடிய திறனை இந்த ஏவூர்தி கொண்டுள்ளது.