சீன-ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை குறித்த உயர் நிலை பேச்சுவார்த்தை பிரஸ்ஸல்ஸில் நடைபெறவுள்ளது
2024-06-14 18:45:12

சீனத் துணை தலைமையமைச்சர் டிங் சுவய் சியாங் ஜுன் 17முதல் 21ஆம் நாள் வரை பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் நடைபெறும் 5ஆவது சீன-ஐரோப்பிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை பற்றிய உயர் நிலை பேச்சுவார்த்தையில் பங்கெடுப்பதுடன், தொடர்ந்து லக்சம்பர்க்கில் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 14ஆம் நாள் தெரிவித்தது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியன் கூறுகையில், சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பசுமை வளரச்சித் துறையில் பரந்த அளவிலான பொது பலன்களையும் மாபெரும் ஒத்துழைப்பு வாய்ப்புகளையும் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.